சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருது

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருதினை சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமாரிடண் வழங்கிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
தென்மாநிலங்களின் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்களின் தேவை இந்த ஆலை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு 9 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களில் சி.பி.சி.எல் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதற்கான சிறப்பு விருதினை கடந்த திங்கள்கிழமை புதுடில்லியில் நடைபெற்ற 26-வது எரிசக்தி மாநாட்டின்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி சி.பி.சி.எல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்.அரவிந்த் குமாரிடம் வழங்கினார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலியில் அமைந்துள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) முன்னதாக சென்னை சுத்திகரிப்பு லிமிடெட் (MRL) என அழைக்கப்பட்டு வந்தது. இது இந்திய அரசு (AMOCO) மற்றும் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி (NIOC) இடையே 1965 -ல் ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. CPCL சுத்திகரிப்பு நிறுவனம் 43 கோடி ரூபாய் செலவில் 27 மாதங்களில் ஒரு சாதனை நேரத்தில் வருடத்திற்கு 2.5 மில்லியன் டன்கள் (MMTPA) என்ற உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்டது. CPCL வருடத்திற்கு 11.5 மில்லியன் டன்கள் (MMTPA) ஒரு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu