சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு
X

 திடீர் ஆய்வில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மணலியில் மாநகராட்சி பகுதிக்குச் சென்று அங்கு மழைநீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து திருவெற்றியூர் சடயங்குப்பம் ஜோதி நகர் பக்கிங்கம் கனால் பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுளளார்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து பணிகளும் முடிவடைந்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் எண்ணூர் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!