சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து தொடக்கம்

சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து தொடக்கம்
X

சென்னை புதுச்சேரி இடையே சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்தை சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால்

சென்னை,புதுச்சேரி இடையே பயணிகள் போக்குவரத்து கப்பல்களை இயக்குவதற்கு இத்திட்டம் முன்மாதிரியாக அமையும்

சென்னை புதுச்சேரி இடையே புதிய சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்தை சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் சென்னை துறைமுகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுனில் பாலிவால் கூறியதாவது:

நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியாவில் நீர்வழிப் பாதை மூலம் உள்நாட்டிற்கிடையேயான சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சாகர்மாலா திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு துறைமுகங்கள் வழியாக சரக்குகளை பெருமளவு கொண்டு செல்லும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது கிழக்கு மற்றும் மேற்கு துறைமுகங்களிடையே உள்நாட்டுச் சரக்குகள் கொண்டு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாலை மார்க்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலில் சீர்கேட்டினை தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சென்னை-புதுச்சேரி கப்பல் போக்குவரத்து:

சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாகவே சென்னை புதுச்சேரி இடையிலான சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள டி பி வேர்ல்டு சரக்கு பெட்டக முனையம், குளோபல் ஷிப்பிங் சர்வீசஸ் ஆகியவை இணைந்து இந்த புதிய கப்பல் போக்குவரத்தினை தொடங்கியுள்ளது. இக்கப்பல் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு முறையும் சுமார் 100 முதல் 125 இருபது அடி நீளம் கொண்ட பெட்டகங்களை எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்திற்கு புதுச்சேரி துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்திற்காக சுமார் ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. இக்கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் லம் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை புதுச்சேரி துறைமுகம் வழியாக ஏற்றுவதியோ, இறக்குமதியோ செய்திட முடியும். முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 1,200 சரக்கு பெட்டகங்களை கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும் என நம்புகிறோம்.

ஏற்றுமதியாளர்கள் தங்களது சரக்குகளை புதுச்சேரி துறைமுகத்தின் மூலம் அனுப்புவதற்கு சுங்கத்துறை ஆவண பரிவர்த்தனைகள் புதுச்சேரியிலேயே நிறைவு செய்து கொள்ள முடியும். இதனால் பல்வேறு சிரமங்களுக்கு தீர்வு ஏற்படும். எதிர்காலத்தில் இதர முனையங்களுக்கும் இதே போல அருகாமையில் உள்ள சிறிய துறைமுகங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு சரக்கு பெட்டைகளை கொண்டு வரவும், அத்துறைமுகங்களுக்கும் சென்னை துறைமுகத்திலிருந்து சரக்கு பெட்டகங்களை எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சென்னை,புதுச்சேரி இடையே பயணிகள் போக்குவரத்து கப்பல்களை இயக்குவதற்கு இத்திட்டம் முன்மாதிரியாக அமையும். இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழகம், புதுச்சேரியில் தொழில் வளம் பெரும்.

மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலத் திட்டம்:

நீண்ட காலமாக நிலுவையில் சுமார் 5,800 கோடி மதிப்பீட்டிலா சென்னைத் துறைமுகம் மதுரவாயல் இடையேயான ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு துறைகள் சார்ந்த அனுமதிகள் முழுமையாகப் பெறப்பட்டு வரும் மார்ச் 10-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். இதன்பிற்கு தகுதியாக ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான பணியாணை வழங்கப்படும் என்றார் சுனில் பாலிவால்.

நிகழ்ச்சியில் சென்னை துறைமுக துணை தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், போக்குவரத்து மேலாளர் கிருபானந்த சாமி, கப்பல் போக்குவரத்து நிறுவன செயல் அதிகாரி ஜூட் வல்லபதாஸ், டி.பி.வேர்ல்டு சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரி விசால் லேதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!