திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்திலின் போலி டிவிட்டர் கணக்கு நீக்கம்!

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்திலின் போலி டிவிட்டர் கணக்கு நீக்கம்!
X

நகைச்சுவை நடிகர் செந்தில்.

பிரபல தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் செந்திலின் போலி டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திரைப்பட நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், தன் பெயரில் சமூக வலைதளத்தில் எந்த ஒரு கணக்கும் தனக்கு இல்லை. ஆனால் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஜூன் 12 அன்று தன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி டிவிட்டர் இணையதளத்தில் போலியான கணக்கை உருவாக்கி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தான் பதிவு செய்தது போல் தமிழக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துகளை, போலியான பதிவுகளைப் போடுகிறார்கள் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் டிவிட்டர் இணையதளத்திற்குப் போலிக் கணக்கை நீக்கம் செய்யக் கோரி முறையீடு அனுப்பியது. அதையடுத்து அந்த போலி ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது. போலியான கணக்குகளை உருவாக்கிய நபர்கள் யார் எனக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் யாரும் போலியான கணக்குகளைப் பின்தொடர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், உண்மையான ஐடி தானா என்பதை உறுதி செய்தபிறகு பின்தொடர வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!