இயற்கை உபாதை கழிக்க வழியின்றி தவித்து நாடு திரும்பிய சென்னை மாணவி
சென்னை மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் சமையல் எரிவாயு உருளை முகவரான இவரது மகள் பகவதி(20) முதலாமாண்டு மருத்துவ பட்டப் படிப்புக்காக உக்ரைன் சென்ற நிலையில், அங்கு உக்ரைன்-ரஷ்ய இடையே போர் பதற்றம் ஏற்பட்டது
இதன் காரணமாக பகவதி உள்ளிட்ட ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வருகிறது
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகம் வந்து அடைந்த மாணவி பகவதி போர் பதட்டத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும், ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கிக்கொண்ட இடத்தில் கழிவறை கூட இல்லாததால் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறினார்.
அதன்பின் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பேருந்து மூலம் ருமேனியா அழைத்துவரப்பட்டு அங்கிருந்து தாயகம் திரும்பியதாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu