இரும்பு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

இரும்பு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
X

பைல் படம்

சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பலிலிருந்து 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டது

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி தகடுகளை ஜன.31-ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த எம். வி. லக்கி சோர்ஸ் என்ற கப்பலிலிருந்து 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு முன்பு மார்ச் 13,2022 எம்.வி. போனிக்ஸ் நேரேட் என்ற கப்பலிலிருந்து 13,879 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளைக் கையாண்டதுதான் சாதனை அளவாக இருந்து வந்தது.

துறைமுக தலைவர் பாராட்டு: இப்புதிய சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகமை நிறுவனமான பரைக் மரைன் சர்வீசஸ், சரக்குகளை ஏற்றி, இறக்கும் நிறுவனமான சீ பிரிட்ஜ் ஸ்டீவடர்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க சென்னை துறைமுகம்...

சென்னை மாநகருக்கென்று பல சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சென்னை மாநகரின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகம். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை வகிக்கும் இத்துறைமுகம், பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது.

தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற பெருமை சென்னைக்கு கிடைக்க இந்த துறைமுகம் தான் காரணம். மேலும், தென்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இது விளங்குகிறது. இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் 3வது பழமையான ஒன்றாக திகழும்.

இது 125 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. எனினும், 1639ம் ஆண்டிலிருந்தே இங்கு கடல் வழி போக்குவரத்து துவங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடம் முழுக்க, நான்கு காலநிலைகளிலும் இயங்கும் இந்த செயற்கை துறைமுகம், முதலில், பயணிகள் போக்குவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல ஆசிய நாடுகளோடு பயணிகள் போக்குவரத்தே இங்கு மும்முரமாக நடந்து வந்தது. பிறகு சிறிய அளவில் சரக்கு ஏற்றுமதி தொடங்கி, நாளடைவில், மிகப் பெரிய சரக்கு போக்குவரத்தைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் தன்னை மாற்றிக் கொண்டது. பண்டைய காலத்தில் இருந்தே இந்த துறைமுகம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

கடல் வழி பயணிகள் போக்குவரத்துக்காக, இந்திய கப்பல் கழகம் கண்டறிந்த ஐந்து துறைமுகங்களில் சென்னையும் ஒன்று. கோவா, கொச்சின், மும்பை மற்றும் மங்களூர் போன்றவை மற்ற நான்கு பயணிகள் போக்குவரத்து நடைபெறும் துறைமுகங்களாகும். கடந்த 100 ஆண்டுகளாக, சிங்கப்பூர், மலேசியா, மணிலா, சூயஸ், ஏடான், கொழும்பு மற்றும் லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சென்னையில் இருந்து நடந்து வந்திருக்கிறது.

1984 வரை சென்னை சிங்கப்பூர் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது என்ற தகவல் ஆச்சிரியத்தை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொகுசுக் கப்பல்கள் சென்னைத் துறைமுகத்தைத் தொட்டுச் செல்கின்றன. சென்னைத் துறைமுகம் பழமை வாய்ந்தது என்ற பெருமையோடு நிற்காமல், அதை உலகத்தரத்தோடு மற்ற முன்னேறிய நவீன துறைமுகங்களோடு போட்டி போடும் நிலைக்கு மேம்படுத்தப்பட்டால், அது தமிழகம் மட்டுமல்ல மொத்த தென் இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு