சென்னை மாநகராட்சி இரண்டாவது மண்டலம் மணலி மண்டல சாதாரண கூட்டம்

சென்னை மாநகராட்சி இரண்டாவது மண்டலம் மணலி மண்டல சாதாரண கூட்டம்
X

சென்னை மாநகராட்சி இரண்டாவது மண்டலம் மணலி மண்டல கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

சென்னை மாநகராட்சி இரண்டாவது மண்டலம் மணலி மண்டல சாதாரண கூட்டம் மண்டல தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி 2வது மண்டலம் மணலி மண்டல சாதாரண கூட்டம் தலைவர் ஏ. வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மெட்ரோ வாட்டர் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு ஓராண்டில் செய்துள்ள பல்வேறு சாதனை திட்டங்கள் பாராட்டும் வகையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பூங்காக்கள் அமைப்பது, சாலைகளை சீரமைப்பது புதிய சாலைகள் போடுதல் மின் விளக்குகளை பராமரித்தல் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை பழுதுபார்த்தல், புதிய பள்ளி கூடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி அ. தி. மு. க கவுன்சிலர்கள் ராஜேஷ் சேகர், ஸ்ரீதர் காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி ர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!