சென்னை மாநகராட்சி 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேஷன் கடையில் ஆய்வு

சென்னை மாநகராட்சி 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேஷன் கடையில் ஆய்வு
X
சென்னை ரேஷன் கடையில் ஆய்வு செய்தார் கவுன்சிலர் சுசிலாராஜா.
சென்னை மாநகராட்சி 13-வது மாமன்ற உறுப்பினர் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுசிலா ராஜா 13வது வார்டுக்கு உட்பட்ட ஐந்து ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரேஷன் கடை ஊழியரிடம் முறையாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்து வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார். மேலும் வயதானவர்களுக்கு உதவும் வகையில் பணி செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த ஆய்வின் போது தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜா,மாவட்ட பிரதிநிதிகள் ரஜினி பாபு,கார்த்திகேயன்,அவைத்தலைவர் மதிவாணன்,வர்த்தக அணி பகுதி அமைப்பாளர்துரைராஜ்,பகுதி பிரதிநிதி மனோகரன், அன்பழகன், பாஸ்கரன், பிரசாத், சிவா, மகி, பாலன்ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி