திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜா சுவாமி கோயிலில் திருத்தேரோட்டம்
ஸ்ரீ தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
திருவொற்றியூரில் பழமை வாய்ந்த கோயிலாக ஸ்ரீ தியாகராஜா சுவாமி திருக்கோயிலில், மாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழாம் நாள் திருவிழாவில், திருத்தேரோட்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சந்திரசேகரர் மனோன்மணி தாயார் தேரில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் திருத்தேரில் சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வடசென்னை பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் பெரிய அளவில் உள்ள தேர் இங்கு மட்டும் உள்ளது என்பதால் தேரோட்டத்தை காண்பதற்காக வடசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்கு முன்பாக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நநடைபெற்றன.
தேரோட்டத்திற்காக ஆலயத்தின் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி முன்னிலையில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது, பொதுமக்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் திருத்தேர் ஊர்வலத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். அதேபோல் பொதுமக்கள் பலரும், மிளகு கலந்த உப்பை தேர் மீது கொட்டி வழிபாடு செய்தனர். இத்திருவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu