பிரிட்டன் நாட்டின் கடற்படை போர்க்கப்பல் ஹெச்.எம்.எஸ்.தாமர் சென்னை வருகை
சென்னைக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரிட்டன் நாட்டின் கடற்படை போர்க்கப்பலான எஸ்எம்எஸ் தமர்
பிரிட்டன் நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான எச்.எம்.எஸ் தமர் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியேற்றுள்ள செய்தி குறிப்பு: பிரிட்டன் நாட்டின் கடற்படை போர்க்கப்பலான எச்.எம்.எஸ்.தமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற 'லா பெரௌஸ்' என்ற கடற்படை போர் பயிற்சியில் பங்கேற்றது.
பயிற்சிகள் நிறைவுற்றதையடுத்து தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில் இக்கப்பல் சென்னை துறைமுகத்திற்கு சனிக்கிழமை அதிகாலை வந்தடைந்தது. நல்லெண்ண அடிப்படையில் வருகை தந்துள்ள இக்கப்பலில் கமாண்டர் டீலோ எலியட் ஸ்மித், கப்பலின் கேப்டன் அயன் லைன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் தூதரக அதிகாரிகள், கடற்படை ஆலோசகர், தமிழ்நாடு புதுச்சேரி கடற்படை அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது இருநாட்டின் கடற்படை தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பரஸ்பர கலந்தாலோசனை நடைபெற்றது.
வரும் மார்ச்-29-ம் தேதி வரை சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கப்பலில் வந்துள்ள பிரிட்டனர் கடற்படை வீரர்கள் இந்திய கடற்படை வீரர்களுடன் இணைந்து திறன்கள், சமூக சேவைகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu