திருவொற்றியூர்: கடற்கரையோரம் விசைப்படகுகள் திடீரென தீப்பற்றி சேதம்

திருவொற்றியூர்: கடற்கரையோரம் விசைப்படகுகள் திடீரென தீப்பற்றி சேதம்
X

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை கடற்கரையோரம், படகு எரிந்ததால் அப்பகுதி  முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தீப்பற்றி எரிந்தன.

திருவொற்றியூர் - எண்ணூர் விரைவு சாலையில், கடற்கரையோரம் உள்ள பகுதியில் சென்னை துறைமுக கடலோர காவல்படைக்கு சொந்தமான 5 விசைப்படகுகள் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பழுதடைந்த விசைப்படகுகளை, அம்பி என்பவர் பிரித்தெடுத்து விற்பனை செய்வதற்காக எடுத்திருந்தார்

இந்நிலையில் இன்று திடீரென மூன்று விசைப்படகுகள் தீப்பற்றி எரிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து இருந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வந்தது

காற்றின் காரணமாக தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து கரும் புகை சூழ்ந்து இருந்தது. திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் திருவொற்றியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
ai tools for education