திருவாெற்றியூரில் பைக் மாேதி விபத்து: சிறுமி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

திருவாெற்றியூரில் பைக் மாேதி விபத்து: சிறுமி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்
X

விபத்தில் உயிரிழந்த சிறுமி யுவஸ்ரீ.

திருவிழா முடிந்து வீட்டுக்கு வரும்போது பைக் மோதி 3 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

திருவொற்றியூர் குப்பம், மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிதரன் மீனவர். இவரது மனைவி சரண்யா(வயது 28) இவர்களது மகள் யுவஸ்ரீ(வயது 11), மகன் ஆகாஷ்(9) மூன்று பேரும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு இரவு 9.30 மணி அளவில் எண்ணூர் விரைவு சாலை பட்டினத்தார் கோவில் அருகே வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மஸ்தான் கோவில் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நிலைதடுமாறி சரண்யா அவரது மகள் யுவஸ்ரீ மகன் ஆகாஷ் ஆகியோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி யுவஸ்ரீ நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எண்ணூர் விரைவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி 9வது வட்டச் செயலாளர் எம்.எல்.சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. சரண்யாவிற்கு முன்பக்க நெற்றியில் தலையில் அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கிருத்தீஸ், சக்திகுமார், சூர்யா ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!