சென்னை எண்ணூர் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது

சென்னை எண்ணூர் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது
X
பைல் படம்.
சென்னை எண்ணூர் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் டேவிட், இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுனாமி குடியிருப்பு பகுதியின் மாடியில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்து கொண்டிருந்ததைக் கவனித்து அதனை ஆய்வாளர் தடுக்க சென்றார்.

பல்வேறு காவல் நிலையங்களில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள தினேஷ் குமார் மற்றும் அவரது தாய், தங்கை என மூன்று பேரும் சேர்ந்து தடுக்க வந்த ஆய்வாளரைத் தாக்கி கீழே தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆய்வாளர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து காவலர்களைத் தாக்கியதற்காகவும் காவலர்களை வேலை செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக தினேஷ்குமார் அவரது தாய் அமுதா மற்றும் சகோதரி சாந்தகுமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!