இரட்டைக்கொலை வழக்கில் 8.வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

பைல் படம்
திருவொற்றியூர் அடுத்த புது வண்ணாரப்பேட்டையில் வசித்த குணசுந்தரி என்பவர் பல வருடங்களுக்கு முன்பு மாரி என்பவரை திருமணம் செய்துள்ளார் அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை (மகேஷ் குமார்- 07) பிறந்த நிலையில் மாரி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து குணசுந்தரிகும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் ராஜா குணசுந்தரியை திருமணம் செய்து தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராஜா குணசுந்தரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது 6 மாத கர்ப்பிணியான குணசுந்தரி அங்கிருந்து பிரிந்து வந்து தனது தாய் நாகவல்லியுடன் சேர்ந்து வசித்து வந்த நிலையில் ராஜா அவ்வப்போது குணசுந்தரி வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது
கடந்த 2014ஆம் வருடம் குணசுந்தரியை ராஜா தனது வீட்டிற்கு வரும்படி அழைத்ததாகவும் குணசுந்தரி மறுப்பு தெரிவித்தாராம் இந்த நிலையில் குணசுந்தரியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து ராஜா குணசுந்தரி மற்றும் அவரது 7 வயது மகன் ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்
இந்நிலையில் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் அவரது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் பல கட்டங்களாக தேடிய நிலையில் குற்றவாளி சிக்கவில்லையாம்.
இந்நிலையில் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யா பாரதி மற்றும் துணை ஆணையாளர் சுந்தரவதனம் மற்றும் திருவொற்றியூர் உதவி ஆணையாளர் முகமது நாசர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில், குற்றவாளியின் உறவினர்கள் இருந்த பகுதி முழுவதும் சோதனையிட்டபோது சத்தியவேடு பகுதியில் ராஜா தங்கி தினக்கூலியாக வேலைக்கு சென்று வருவது தெரியவந்தது. இதனை அடுத்து சத்தியவேடு பகுதியில் தனிப்படை போலீசார் 4 நாட்களாக அதே பகுதியில் தங்கி குற்றவாளியை கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 வருடங்கள் கழித்து மனைவி மற்றும் மகனை இரட்டைக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து தண்டனை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.. மேலும் இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர் நரசிம்மன், சிவகுமார், ரமேஷ்பாபு, விஜயகுமார், ஆகியோரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu