குளிர்பானத்தில் மயக்க மருந்து: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

குளிர்பானத்தில் மயக்க மருந்து: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட ராகவா ராஜா.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சென்னையில் வசித்து வருபவர் கண்ணன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவியையும் ஒப்பந்த தொழிலாளராக அதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வேலைக்கு சென்று வரும் நிலையில் நேற்று மாலை 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியான தனது மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து தனது மகளிடம் தந்தை கண்ணன் விசாரித்தார். அப்பொழுது தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் வசிக்கும் ராகவா ராஜா என்பவர் தனக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று அதிர்ச்சி வெளியிட்டார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். அதனை கலைப்பதற்காக அவரே மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் தற்பொழுது வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தந்தை கண்ணன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராகவா ராஜாவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!