சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேர் கைது

சாத்தாங்காடு பகுதிகளில்  வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட நான்கு பேர்.

சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நிலையில் அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

மேலும் அதே மர்ம நபர்கள் அருகிலுள்ள ஒரு வீடு மற்றும் ஒரு தங்க கடையை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொள்ளையடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சாத்தாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் (19), கோபி(25), மகபூப்பாஷா(23), விக்னேஷ் (22) ஆகிய நான்கு பேரை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடமிருந்து 2. 1/2 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!