எர்ணாவூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய 3 பேர் கைது

எர்ணாவூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட மூவர்.

சென்னை எர்ணாவூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 120வது பிளாக்கில் வசித்து வரும் முருகன். இவரது மனைவியான ஷகிலா (வயது 40 ).இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது இதனையடுத்து ஷகிலா கணவன் முருகன் வீட்டில் இல்லாத போது வீட்டு அருகே வசித்து வரும் மணிகண்டன் (28) என்ற வாலிபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் ஷகிலா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை பார்த்து சந்தேகப்பட்ட கணவர் முருகன் , தனது மகன் வினோத் மற்றும் மருமகன் அருண் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டன் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன் வினோத் மருமகன் அருண் ஆகிய மூன்று பேர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது .

இச்சம்பவத்தில் கள்ளக்காதலன் மணிகண்டனை தலையில் வெட்டியதில் சிறிய காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டதில் முருகன் மனைவிக்கும் தனக்கு தொடர்பு ஏற்பட்டது அவரது கணவருக்கு தெரியவந்ததையடுத்து முருகன் மற்றும் அவரது மகன் மருமகன் ஆகிய 3 பேர் தன்னை கத்தியால் வெட்டியதாக தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியான ஷகிலாவின் கணவர் முருகன் என்பவரை மட்டும் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுனாமி குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!