திருவொற்றியூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 2 அடி உயர விநாயகர் சிலை

திருவொற்றியூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 2 அடி உயர விநாயகர் சிலை
X

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் கடற்கரையோரம் இரண்டு அடி உயர விநாயகர் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் கடற்கரையோரம் 2 அடி உயர விநாயகர் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் கடற்கரையோரம் இரண்டு அடி உயர விநாயகர் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

தற்பொழுது தமிழகத்தில் தென் கிழக்கு வங்க கடலில் உருவான அசானி புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது இதன் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணூர் பகுதிகளில் கடல் அலைகள் 5 அடி உயரத்திற்கு உயர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில் திருவொற்றியூரை அடுத்த பலகை தொட்டி குப்பம் பகுதியில் திடீரென 2 அடி உயர விநாயகர் கல் சிலை ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

மர்ம நபர்கள் யாரேனும் திருடி கொண்டு வந்த கல் சிலையை கடலில் தூக்கி வீசி உள்ளார்களா அல்லது ஏற்கனவே போடப்பட்ட கல் சிலையானது புயலின் காரணமாக கரை ஒதுங்கி உள்ளதா என்ற கோணத்தில் எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் கடலில் இருந்த சிலையை மீட்டு எண்ணூர் காவலர்கள் திருவெற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர் தாசில்தார் முகமதுரபீக், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்ரியா ஆகியோர் தலைமையில் பெரப்பட்ட விநாயகர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!