சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
X
சென்னையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பிரவீன்(23). பிஸ்கட் வியாபாரியான இவர் திருவொற்றியூரில் உள்ள மளிகை கடைக்கு பிஸ்கட் பாக்கெட் கொடுத்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள 17 வயது சிறுமியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி பிரவீனுடன் பழகி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரவீன் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் விசாரிக்கும்போது அவர் பிரவீன் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!