தேசிய நூலாக திருக்குறள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

தேசிய நூலாக திருக்குறள்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
X

கவிஞர் வைரமுத்து 

திருக்குறள் நூலை தேசிய நூலாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கார்ல்டுவெல் வேல் நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் இரு சிலைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கும் வழங்கப்பட உள்ளது.

சென்னை அடையாறில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் வைரமுத்து பேசும்போது, குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டும்போது மகிழ்ச்சியடைகிறோம். தமிழன் என்று பெருமை கொள்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil