ஒரு தலைக் காதல் விவகாரம்: காதலியின் சகோதரிக்கு கத்தி குத்து

ஒரு தலைக் காதல் விவகாரம்: காதலியின் சகோதரிக்கு கத்தி குத்து
X

தற்கொலைக்கு முயன்ற சரவணன் இம்மானுவேல்

தான் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயம் நடந்ததால், அவரது சகோதரியை கத்தியால் குத்தி, தானும் தற்கொலைக்கு முயன்ற ஒருதலை காதலன்

சென்னை மௌலிவாக்கம் தமிழ்நாடு சாலை பகுதியைச் சேர்ந்த சரவணன் இமானுவேல் (25) இவர் திருவிக நகர் பகுதியில் உள்ள சந்தியா என்ற பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததுள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் இல்லாத சந்தியாவிற்கு பெற்றோர் ஸ்தானத்தில் பெரியம்மா ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். இதை சரவணன் இமானுவேலின் நண்பர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் இம்மானுவேல் நேரடியே சென்று நிச்சயதார்த்தம் நடந்து குறித்து வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சரவணன் இம்மானுவேல் கோபப்பட்ட மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியாவின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் சகோதரி கோமதி தடுத்த போது, அவரையும் தாக்கியுள்ளார். கோமதி கூச்சலிட வே, என்ன செய்வதென்று அறியாமல் சரவணன் இம்மானுவேல் கழிவறைக்குச் சென்று தன் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவசர உதவி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து திருவிக நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story