குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள்

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய  இளைஞர்கள்
X

குடி போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்து.

புளியந்தோப்பு அருகே குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து போக்கு வரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக வந்த கார் ஒன்று அதிவேகமாக அந்தப்பகுதியில் சென்றது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டிகளில் கார் அதிவேகமாக இடித்தது மேலும் அப்பகுதியில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது

அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர் மேலும் இது குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பேரில் அங்கு வந்த புளியந்தோப்பு போலீசார் காரில் இருந்த மூன்று இளைஞர்களை மீட்டு இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் அளித்தனர்

தகவலின் பேரில் அங்கு வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காரில் லேசான காயம் பட்டிருந்த அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி அளித்தனர் போலீசாரின் விசாரணையில் சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 22 அதே பகுதியை சேர்ந்த விக்கி 21 மேலும் திருமங்கலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 22 என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் மூவரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை இடித்து தள்ளி தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!