ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
X
ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 3வது பிளாக் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் அபிராமி, 27 , இவருக்கு கடந்த 23ஆம் தேதி, ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 24 ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொடுங்கையூரில் நடைபெற்றது.

இந்நிலையில், ஓட்டேரி வி.வி. கோவில் தெருவில் உள்ள அபிராமியின் அக்கா மோகனப்பிரியா என்பவர் வீட்டிற்கு, அபிராமி - சதீஷ் இருவரும் நேற்று விருந்துக்காக வந்துள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அபிராமி பெட்ரூம் கதவை தாழ்போட்டுக் கொண்டு, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அபிராமி தூக்குப்போட்டுக் கொண்டது தெரியவந்தது. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலின் பேரில், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த அபிராமி இரவில் தூக்கம் வராமல் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எதற்கெடுத்தாலும் பயந்த அவர், தூங்கினால் கனவு வரும் என்ற பயத்தில் தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபிராமி திருமணமான 5வது நாளிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!