தொல். திருமாளவனுடன் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் சந்திப்பு

தொல். திருமாளவனுடன் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் சந்திப்பு
X

சென்னையில் தொல். திருமாவளவனை விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் சண். அரிகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

தொல். திருமாளவனுடன் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் சண் .அரிகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

சங்ககால பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினியாவிற்கு மணிமண்டபம் அமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் சண்.அரிகிருஷ்ணன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி.க. தலைமை அலுவலகத்தில் தொல். திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் சென்னை ஆர்.பாண்டியன், மாநில மாணவரணி செயலாளர் தமிழன் கிருஷ்ணா,அண்ணா நகர் தொகுதி செயலாளர் மணிமுத்து,ஆயிரம் விளக்கு தொகுதி செயலாளர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!