கொரோனா காலத்திலும் மக்களை காத்தவர் நம் முதலமைச்சர் : சாலமன் பாப்பையா

கொரோனா காலத்திலும்  மக்களை காத்தவர் நம் முதலமைச்சர் : சாலமன் பாப்பையா
X

சாலமன் பாப்பையா கலந்துகொண்ட முதலமைச்சர் பிறந்தநாள் விழா.

கொரோனா வாட்டியபோதும், மழை வெள்ளம் சூழ்ந்தபோதும் நம் முதல்வர் முன்னால் நின்று மக்களை காத்தார்.

கொரோனா காலகட்டத்தில் சாமிகள் கதவடைத்தாலும் நம் முதல்வர் நம்மை காத்து நின்றார் என்று ஓட்டேரியில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பேசினார்.

நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பேசியதாவது :

இவ்வரசு அமைந்ததும் இரு நெருக்கடி வந்தது. ஒன்று கொரோனா மற்றொன்று மழைவெள்ளம். கொரோனா காலத்தில் எல்லா சாமிகளும் போய் கதவடைத்துக்கொண்டது. கொரோனா காலத்தில் கண்ணுக்கு தெரியாத கிருமிக்காக சாமியே கதவடைத்தது அப்போ? சாமி பெரிதா? கிருமி பெரிதா? அந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக இறங்கி வேலை செய்தவர் நம் முதல்வர். எப்போது சொன்ன சொல்லை மீறி நிற்கிறார்களோ அப்போது கூனி குறுகி நிற்கிறேன் என்றாரே அப்போதே நாம் சிறந்த தலைவரை பெற்றுவிட்டோம் என்பது நமக்கு தெரிய வந்துவிட்டது. இப்படி ஒரு தலைவரா எங்கு சென்றாலும் நம் தலைவரை பற்றி பேசுகிறார்கள் அப்படி ஒரு தலைவரை நாம் பெற்றுள்ளோம் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture