இந்தியா சார்பில் ஆங்கில மொழித் திறன் தேர்வை உருவாக்க கோரிக்கை

பைல் படம்
ஏஏஏஓஇயின் நிறுவனர் பால் செல்லகுமார் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு நாட்டு மாணவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு படிக்கவும் வேலைவாய்ப்புக்கும் செல்ல ஐஇஎல்டிஎஸ் என்ற சர்வதேச ஆங்கில மொழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வை இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் இந்த தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகமாகி, அதிக வருவாயும் கிடைக்கிறது. இந்த தேர்வை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐடிபி நிறுவனத்துக்கு ரூ.1,300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
ஆஸ்திரேலிய பல்கலைகளை சேர்ந்த 38 துணை வேந்தர்களால் நடத்தப்படும் ஐடிபி அமைப்பு, வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான ஏஜென்டுகள் போல் செயல்படுகிறது. ஐஇஎல்டிஎஸ் தேர்வுக்கான உரிமையை ஐடிபி வாங்கி அதிகளவு வருவாய் பெறுகிறது.
ஆனால், இந்த முறை பிரபலமாவதற்கும், வளர்ச்சி பெறுவற்கும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்களே காரணம். இந்தியாவிலிருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஐஇஎல்டிஎஸ்., தேர்வுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் செலுத்துகின்றனர்.
தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய ஐ.டி.பி., அமைப்புக்கு ரூ.1,200 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்து அன்னிய செலாவணியாக செல்ல உள்ளது என்றார். எனவே இந்தியா சார்பில் தனி ஆங்கில மொழி திறன் தேர்வை உருவாக்க புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu