சென்னை மழை பாதிப்பு : மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை மழை பாதிப்பு :  மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
X

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி அளித்தார்.

இன்று காலை முதல் புரசை வாக்கம், கொசப்பேட்டை,கொளத்தூர்,வில்லிவாக்கம் பகுதியில் ,பார்வையிட்டேன் இன்று மாலை தென்சென்னையில் ஆய்வு செய்ய உள்ளேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்

சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீணையப்பு துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் 160 நிவாரண மையங்கள் உள்ளது 44 மையத்தில் மக்கள் உள்ளனர்

மாணவர்கள் நலன் கருதிசென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் அடுத்த இரு தினங்களுக்கு விடுமுறை 500 இடங்களில் பம்புகள் மூலம் தேங்கி இருக்கு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

1070 என்ற தொலை பேசியில் மாநில கட்டு பாட்டு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அரசு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்

தண்ணீர் சூழந்துள்ள இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் அவர்கள் ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்து விட்டார் என்பது குறித்து நான் பேசவில்லை நான் ஆட்சிக்கு வந்தவுடனே மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தி உள்ளோம் கடந்த கால ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை

நாங்கள் வந்ததில் இருந்து 50%. பணி செய்திருப்பது திருப்தி, மீதம் உள்ள 50% பணிகளை செய்ய உள்ளோம் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்னை திரும்ப முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறைமாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்