சென்னை மாநகராட்சியில் 80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்

சென்னை மாநகராட்சியில்  80 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றிய அதிகாரிகள்
X

பைல் படம்

சென்னையில் கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட, 79,477 சுவரொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

சென்னை நகரை சுத்தப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி திவீரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அகற்றும் பணி கடந்த 8ம் தேதி மாநகராட்சிகள் அதிகாரிகள் தொடங்கினர்.

அதன்படி பொது இடங்கள், மாநகராட்சி இடங்கள், மேம்பாலங்கள் போன்ற இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகிறது.கடந்த 20 நாட்களில் 14,295 இடங்களில் ஒட்டப்பட்ட 79,477 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்