விடுதலை வெளிச்சம் நூல் வெளியீட்டு விழா : தொல் திருமாவளவன்
தொல்.திருமாவளவன். பைல் படம்
சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் விடுதலை வெளிச்சம் என்ற கவிதை நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் எம்.பி வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசியதாவது :-
பௌதம் இன்று அடையாளமாக மட்டுமே இருக்கின்றது. இன்று இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பௌதர்களாக இருந்தவர்கள் தான் என்றும் அடிமைப்பட்டு கிடைப்பவர்கள் அடிமைகளாகவே இருக்க முடியாது. அவர்கள் வெகுண்டு எழுவார்கள் என்றார்.
விடுதலை சிறுத்தைகளின் பணி வெறும் ஊன்றுகோல் தரும் பணி அல்ல.அடுத்தடுத்த தலைமுறை தலைநிமிர்ந்து வாழ முதுகெலும்பு தரும் பணி எனவும், சனாதனத்தை சாதாரணமாக எதிர்த்து விட முடியாது. தேர்தல் அரசியலில் இருந்தும் சமரசம் செய்துகொள்ளாமல் சனாதனத்தை எதிர்த்து வரும் கட்சி இந்திய மண்ணில் விடுதலை சிறுத்தைகள் தான் என்றார்.
மேலும் பெரியார் மற்றும் பெரியாரியத்தை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் என்று பார்ப்பவர்கள் அரசியல் அறியாமையில் உள்ளவர்கள் என்றும் ஒரே நாடு ஒரே கலாச்சாரத்திற்குள் தமிழ் மொழியை, தேசியத்தை கலாச்சாரத்தை விழுங்க பார்க்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்.இந்து தேசியம் என்றாலே சனாதன தேசியம் தான் என்றும்.தமிழ் தேசியம் அடிப்படையில் இந்திய தேசிய எதிர்ப்பு அரசியல் என்றும் இந்திய தேசிய அரசியலே மத அரசியல் தான் என்றார்.
சனாதன சக்திகளின் திட்டதால் மட்டுமே மோடியை நண்பனாக பார்க்கிறார்கள். சமூக நீதிக்கு போராடும் விடுதலை சிறுத்தைகளின் கொடியை பொது இடத்தில் கொடி ஏற்ற மறுக்கிறார்கள் என்றார்.
மேலும் தமிழ் இந்து என்று சொல்லும் தமிழ் தேசியம் சங்பரிவார்களின் அரசியல் என்றும் இந்தியா என்பது இன்னும் ஒரு தேசமாக உருவாகவில்லை. சங்பரிவாலர்கள் ஆபத்தான அரசியலை கையில் வைத்திருக்கிறார்கள் என்றார்.
இறுதியாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் சமூக நீதி இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் விசிக ஈடுபட்டுள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu