'தி.மு.க.வை வளர்த்ததே எம்.ஜி.ஆர் தான்' -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வை வளர்த்ததே எம்.ஜி.ஆர் தான் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
X

தி.மு.க. புகாருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த  பேட்டியில் பதில் கூறினார்.

‘தி.மு.க.வை வளர்த்ததே எம்.ஜி.ஆர் தான்’ - என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவது பொங்கல் பரிசு கலப்படத்தால் தி.மு.க. அரசு மீதான மக்கள் வெறுப்பை திசை திருப்பவே நடக்கிறது. இதற்கெல்லாம் அ.தி.மு.க. பயப்படாது. தமிழ், தமிழர் என்று எப்போதும் பேசும் தி.மு.க. அரசு ஏன் ஊசி உள்ளிட்ட கொள்முதலை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கியது ஏன் என டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று அழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என வினவினார். எம்.ஜி.ஆர். இல்லையென்றால் கருணாநிதியே இருந்திருக்க மாட்டார். முதலமைச்சராக கருணாநிதியை முன்மொழிந்ததே எம்.ஜி.ஆர். தான் என்றார். தி.மு.க.வை பட்டி தொட்டியெங்கும் வளர்த்ததே எம்.ஜி.ஆர். தான் எனவும் கூறினார்.

கருணாநிதி திரைக்கதை, வசனத்தால் அவரது குடும்பத்தில் இருந்தவர்களை பிரபலப்படுத்தாதது ஏன் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்தார். என்னை பற்றி தி.மு.க.வின் நாளேடான முரசொலியில் வந்துள்ளது மகிழ்ச்சி என்றார். 2004, 2009 மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளாத நிலைக்கு செய்தி மற்றும் விளம்பர துறை தான் காரணம். சரியான முறையில் வடிவமைக்காத காரணத்தால் அணிவகுப்பில் பங்கேற்க முடிய வில்லை, இதற்கு தமிழக அரசின் தகுதியின்மை தான் காரணம் என்றார். நிராகரிப்பப்பட்டதற்கு முதலில் மேற்கு வங்க முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

தனது பெயரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே எம்.ஜி.ஆர் தான், இது அப்போதைய சுகாதார துறை அமைச்சர் ஹெண்டேவிற்கு தெரியும். வரலாற்றை மாற்றாதீர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவர் பராமரிப்பு என்ற பெயரில் வெறும் குடையை தான் வைத்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெயலலிதா தான் பெரிய அளவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை மாற்றினார் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business