ஹோட்டல்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்க வேண்டும், விக்கிரமராஜா வேண்டுகோள்

ஹோட்டல்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்க வேண்டும், விக்கிரமராஜா வேண்டுகோள்
X

பூந்தமல்லி வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

ஹோட்டல்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பூந்தமல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக பூந்தமல்லியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3 வது அலை வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கடைகளில் கூட்டம் சேர விடக்கூடாது. ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றி அதேநேரம் ஹோட்டல்களை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பெண்கள் தலையில் வைக்கும் பூக்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதால் அரசு இதனை கவனத்தில் எடுத்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Tags

Next Story