கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 அறுவை சிகிச்சை அரங்கம், அமைச்சர் திறப்பு
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1.65 கோடி மதிப்பிலான அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட வில்லியம் டி ஜி மார்ட்டன் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மத்திய கிருமி நீக்கி மையம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்ரமணியன் கூறியதாவது:
1.65 கோடி செலவில் KMC மருத்துவமனையில் 4 அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேரிடர் காலங்களில் கிருமி நீக்கி நிலையங்கள் முக்கியம் என்பதால் 75 லட்சம் செலவில் மத்திய கிருமி நீக்கி நிலையம் ஒன்று இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பாக
ஒரே நேரத்தில் நான்கு நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
எந்தெந்த மாவட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக சிரோ சர்வேயில் கூறப்பட்டுள்ளதோ அங்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்படும் அதுமட்டுமின்றி
விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்து கோவிட் தொற்று பரிசோதனைகள் செய்ய அறிவுறுதியுள்ளதாகவும்
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை முக்கியம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை சான்றிதல் இருக்கும் நபர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட உள்ளது
காசிமெடு மார்க்கெட்டில் ஒரே இடமாக மக்கள் நிறைய கூடுவதை தடுக்க மாற்று இடங்களில் மார்க்கெட் கடைகளை மாற்ற திட்டம் உள்ளது.
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளில் மத்திய குழு ஆய்வு செய்த பிறகு நமக்கான அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu