தி. நகரில் சாலை விபத்து: 2 வயது சிறுமி பரிதாப பலி

தி. நகரில் சாலை விபத்து: 2 வயது சிறுமி பரிதாப பலி
X
சென்னை தி.நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ராயப்பேட்டை சைவமுத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (45). இஸ்திரி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா, (38).ஜெயராமன், சித்ரா, மகன் பார்கவ், 6 மற்றும் மகள் சாய் தன்ஷிகா, 2 ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தி.நகருக்கு சென்றனர்.

பாண்டி பஜார், தியாகராயர் சாலை, தெற்கு போக் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியது. இதில், நால்வரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் படுகாயமடைந்த தன்ஷிகா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர், அஜய் சுப்பிரமணியம் ( 27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது