அரசுக்கு வணிகர் சங்கம் துணையாக நிற்கும்- விக்கிரமராஜா அறிவிப்பு!

அரசுக்கு வணிகர் சங்கம் துணையாக நிற்கும்-  விக்கிரமராஜா அறிவிப்பு!
X

விக்கிரமராஜா

தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு வணிகர் சங்கம் துணை நிற்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓட்டேரியில் வாகனங்களில் மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் திட்டத்தை வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வணிகர் சங்கம் துணை நிற்கும். சோதனை காலத்தில் மக்களுக்கு துணை நிற்கிறோம், தொலைபேசி ஆர்டர் மூலமும், வாகனங்கள் மூலம் லாப நோக்கம் இல்லாமல் மளிகை பொருட்களை குறைந்த விலையில் விற்று வருகிறோம் என்றும், வருகிற 6 நாட்களிலும் வணிகர்கள் பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்து சேவை செய்ய வேண்டும் என வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்கம் இணைந்து 2197 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை இன்று முதல் வரும் 7 தேதி வரை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எங்கேனும் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் தொலைபேசியில் அழைத்தால் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!