புளியந்தோப்பில் வீட்டின் ஜன்னல் வழியாக செல்போன்கள் திருட்டு

புளியந்தோப்பில் வீட்டின் ஜன்னல் வழியாக  செல்போன்கள் திருட்டு
X
புளியந்தோப்பில் ஜன்னல்வழியாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடிய நபர்களுக்கு போலீசார் விசாரணை

புளியந்தோப்பில் ஜன்னல்வழியாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடப்பட்ட சம்பவம் தொர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை புளியந்தோப்பு வ உ சி நகர் 8வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி( 46 ). இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அம்மா முருகம்மாள் மாமா எழிலரசன் மற்றும் தனது ஏழு வயது மகனுடன் ஜெகதீஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அனைவரும் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் வழியாக கைவிட்டு திருடர்கள் இந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜெகதீஸ்வரி, புளியந்தோப்பு குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future