காதலி போன் எடுத்துப் பேசாததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை

காதலி போன் எடுத்துப் பேசாததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட ஜான் பீட்டர் ஜான்.

காதலி போன் எடுத்துப் பேசாததால் விரக்தியில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு கே எம் கார்டன் 8வது தெரு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் ஜான் பீட்டர் ஜான் 27. இவர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார். மேலும் புளியதோப்பு டோபிகண்ணா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் பாத்ரூம் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரது தம்பி ஷாம் கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது அண்ணன் பீட்டர் ஜான் இரும்பு பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற புளியந்தோப்பு போலீசார் பீட்டர் ஜான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பீட்டர் ஜான் கடந்த மூன்று வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சம்பவத்தன்று காலை முதல் அந்தப் பெண் பீட்டர் ஜான் பலமுறை போன் செய்தும் போன் எடுக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!