கோமா நிலைக்கு சென்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்; சின்னத்திரையினர் அதிர்ச்சி

கோமா நிலைக்கு சென்ற சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்; சின்னத்திரையினர் அதிர்ச்சி
X

நடிகர் வேணு அரவிந்த்.

சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் வேணு அரவிந்த், கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் ராதிகாவுடன் 'வாணி ராணி', 'அலைகள்' உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்தவர் வேணு அரவிந்த்.

இவர் சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, அவரது மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!