புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் :3 பேர் கைது

புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் :3 பேர் கைது
X
பைல் படம்
புளியந்தோப்பு பகுதியில் கோஷ்டி மோதல் பிரச்சனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பொன்னப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கின்ற பொக்க சதீஷ் வயது 35 இவர் மீது பேசன் பிரிட்ஜ் புளியந்தோப்பு ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 18 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரின் சித்தி மகன் புளியந்தோப்பு கிருஷ்ணபிள்ளை தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் 28 இவர் நேற்று இரவு 11 மணியளவில் சதீஷ் வீட்டருகே சென்றுள்ளார் ஏற்கனவே இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அங்கு நண்பர்களுடன் சதீஷ்குமார் மது குடித்துக் கொண்டிருந்தார் அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

சதீஷ் குமார் மற்றும் அவரது தம்பி யுவராஜ் ஆகியோர் இருவரும் சேர்ந்து அருண்குமாரை கல்லால் பலமாகத் தாக்கி உள்ளனர். அப்போது அருண்குமார் அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதில் சதீஷ்குமார் மற்றும் யுவராஜ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு இருவரும் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

மற்றொரு நபர் அருண்குமார் என்பவருக்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மோதலில் ஈடுபட்ட சதீஷ், யுவராஜ், அருண்குமார் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!