நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து விட்டனர்: ஜெயக்குமார்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து விட்டனர்: ஜெயக்குமார்
X

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்த ஆட்சிக்கு வந்து விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன்,முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது :

திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து விட்டனர்,நிதி சுமை இருந்தாலும் தொழிலாளர்கள் நலனுக்காக பல ஆயிரம் கோடி நாங்கள் செலவு செய்தோம் ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமலுக்கு கொண்டு வருவோம் என கூறிவிட்டு தற்போது முடியாது என்கின்றனர் என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகைக்கு முன்பாக காங்கிரஸ் போராடினார்கள் ஆனால் அவர்கள் மீது வழக்கு பதியவில்லை,எதிர்கட்சி என்றால் சுண்ணாம்பும், தோழமை கட்சி என்றால் வெண்ணெய் என்று திமுக பார்ப்பதாக கூறினார்.

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தற்போது தனிப்படை அமைத்து உள்ள இவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏன் முயற்சி செய்யவில்லை,

மாணவர்கள் மரணத்திற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, தற்போது ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சி என்றாலே இவர்கள் முனைப்புடன் இருப்பது ஏன் என்றார்.

அதேபோன்று ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை என்றும்,ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அவருக்கு அதிமுக துணை நிற்கும் என கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!