ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- அமைச்சர் தகவல்

ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பூசி- அமைச்சர் தகவல்
X
கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
தமிழகத்தில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்

.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார்.. தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து முடித்த பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது

தமிழகம் முழுவதும் வரும் 12ஆம் தேதி ஒரே நாளில் 10,000 சிறப்பு முகாம்களில் இருபது லட்சம் பேருக்கு தடுப்பூசி போடதிட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, த.வேலு பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சரண்யா ஹரி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்


Tags

Next Story