ஊடகத்துறையினருக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஊடகத்துறையினருக்கு உரிய சலுகைகள் வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
X

நாட்டின் மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்கும் ஊடகத் துறை முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். ஆகவே இத்தகைய முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். இவ்வாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!