மின் கட்டணம் தொடர்பான பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி
மின் கட்டணம் தொடர்பாக மின்னகத்திற்கு வந்த 14 லட்சத்து 69 ஆயிரம் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "மின்னகம் ' திறக்கப்பட்டு நூறு நாள் நிறைவுற்ற நிலையில், மின்னகத்திற்கு வந்த புகார்களில் 99 விழுக்காடு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மின்வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களில் அவசரப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அரசின் நிதி நிலையை பொறுத்து நிரப்பப்படும்" சேகர் ரெட்டி டைரியில் "எனது பெயர் இருந்ததாக கூறுவது தவறான தகவல், உண்மையிலேயே பெயர் இருந்தால் பொறுப்பேற்க தயார்.
மின் நுகர்வோரின் புகார்களை தொலைபேசி வாயிலாக பெறும் வகையில் கடந்த 20.6.2021ம் தேதியில் திறக்கப்பட்ட ' மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டு நூறு நாட்கள் நிறைவடைந்ததுள்ளது.
தமிழகத்தின் 3கோடியே 16 லட்சம் மின் நுகர்வோருக்கும் பயன்படும் விதமாக மின்னகம் தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் மின் வாரிய புகார்களுக்கு மொத்தமாக 107 எண்கள் இருந்தன. இவற்றை ஒரே எண்ணில் கொண்டுவரும் விதமாக மின்னகம் திறக்கப்பட்டது , இன்று மின்னகம் திறக்கப்பட்டதின் 100வது நாள். வரும் காலங்களில் தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமான அறிவிப்புகள் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக பராமரிப்பின்றி இருந்த 2லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் திமுக ஆட்சியில் நிறைவடைந்துள்ளன. 8905 இடங்களில் புதிய மின்மாற்றிகளை அமைப்பதற்கான பணிகள் அண்மையில் தொடங்கின.2ஆயிரம் மின் மாற்றிகள் நேற்றுவரை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. பருவ மழை காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 1லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன.
3 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் தமிழகத்தி்ல் உள்ளன. மின் நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டு அளவை தெரிந்து கொள்ளுவதற்கான ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன..ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் வாரியம் வீடுகளில் ஏற்படும் மின் பழுதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். பருவ மழை காலங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் மின்வாரியப் பணியாளர்கள் இணைந்து பணி செய்வர்.
சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் இருந்ததாக வாரப் பத்திரிகை, சமூக ஊடகங்களில் வரும் தகவல் தவறானது. உண்மையிலேயே பெயர் இருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன். வழிப்போக்கில் செல்பவர்கள் பதிவிடும் தகவல் அது. என்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக கூறி சம்மன் வந்ததாக கூறப்பட்டது தவறான தகவல் . அமாலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ என் மீது புகார் கூறினால் நான் பதிலளிக்க தயார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 20ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சார உற்பத்தி அறிவிப்பில் 4 ஆயிரம் மெகாவாட்டுக்கான உற்பத்தி இந்த ஆண்டே தொடங்க உள்ளது.
மின்னகம் மூலம் துறை அதிகாரிகள் , தமிழகம் முழுவதும் மின்வாரியப் பணிகளை சென்னையில் இருந்தவாறு கண்காணிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. 1990 நவம்பர் 17 ல் கருணாநிதி விவசாயிகளுக்கான இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டார் , 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் அப்போது பயனடைந்தனர்.
மின் தடை தொடர்பாக 250 சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்தோம் , அதில் 50 பேர் மட்டுமே மின்இணைப்பு எண்ணுடன் மின்தடை தொடர்பாக பதிவிட்டனர். மற்றவை தவறான தகவல்களாக இருந்தன. மின் வாரியத்தில் 56, 000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவசரமாக நிரப்ப வேண்டிய காலியிடம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அரசின் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu