பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு கடந்த மாதம் ரூ.1242 கோடி வருமானம்

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு   கடந்த மாதம் ரூ.1242 கோடி வருமானம்
X

பைல் படம்

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ஜூலை மாதத்தில் ரூ.1242 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது

பதிவுத்துறையில் அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அரசின் வருவாயை வசூலிக்க முழுகவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடனடியாக விடுவிக்கவும், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவுசெய்து துறை வருவாயை அதிகரிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் பதிவுத்துறை மூலம் அரசுக்கு ரூ.1242.22 கோடி கிடைத்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாத வருவாயைகாட்டிலும் நடப்பாண்டு ஜூலை வருவாய் ரூ.598 கோடி அதிகம் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story