பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள். சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேலுள்ள இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போது அவர் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டதாகவும்

அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என தெரிவித்தார்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!