ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது: நீதிபதிகள் வேதனை

ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது: நீதிபதிகள் வேதனை
X

ஊழல் குறித்து வேதனை தெரிவித்த நீதி பதிகள்.( பைல் படம்)

ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க வைத்து விட்டது என்று உயர் நீதி மன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

1,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அப்போது ஊழல் எனும் கரையான் சமுதாயத்தை செல்லரிக்க வைத்து விட்டது என்று உயர் நீதி மன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers