சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது பத்தாது: அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் பத்தாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார். அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் பில்டப் செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேஷம் கிடையாது. இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை. யானை பலம் கொண்டது அதிமுக. அத்தகைய பலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்வது நகைச்சுவை. இதனை எள்ளி நகையாடும் வகையில்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.
அக்டோபர் 17-ம் தேதிதான் பொன்விழா. 16-ம் தேதி செல்கிறார். வேண்டுமென்றே கட்சிக் கொடியை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முயல்கிறார் சசிகலா. அதனைத் தடுத்து சட்டத்தை நாங்கள் கையிலெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சசிகலாவுக்கு அமமுகவில் ஒரு நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சியில் அவருக்கு இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu