கோயில்கள் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி: இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகம்

கோயில்கள் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி: இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகம்
X

பைல் படம்

கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுவிட்டன

இனி எல்லா நாட்களுமே கோயில்களுக்கு செல்லமுடியும், மழலையர் பள்ளிகள் திறப்பு.. இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. இனி எல்லா நாட்களுமே கோயில்களுக்கு செல்லலாம் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளித்து முதலவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன் பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

மேலும், விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, முதலமைச்சர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக முதலவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு