தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!

தேர்தலுக்கு மறுநாள் விடுமுறை கேட்டு ஆசிரியர்கள் கோரிக்கை..!
X

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு சாவடி பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு மின்னணு இயந்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை காலதாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதி தங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற துறைகளிலும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture