தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (பைல் படம்)
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சம்பந்தமான மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தை சிறுநீரக மாற்று சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியவர்,
சென்னை. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தூத்துக்குடி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், தற்போது தமிழகத்தில் 9 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், கொரோனா ஒரு சில மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் அதிக பரவக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
முன்கள பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தால் அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவித்த அவர்,
அதிகப்படியான கட்டணம் வசூலித்த 96 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியவர் இக்கட்டான காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் பொதுமக்கள் மருத்துவமனைகள் அதிக கட்டணம் கேட்கும்போதே புகார் அளிக்க வேண்டும் அப்போதுதான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu