சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை

சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை
X

சிங்கார சென்னை பைல் படம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி இணைந்து செயல்படும் என்றும் திட்ட ஒப்புதல் குழு மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் குறிப்பாக சுவரொட்டிகள் இல்லாத மாநகரமாக உருவாக்க வேண்டும் என்று அடுத்தடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வேறு பல திட்டங்களை இணைத்து உட்கட்டமைப்பு பணிகள், சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசின் காகிதமில்லா பட்ஜெட் தாக்கலில் இடம்பெற்றிருந்தது.

Tags

Next Story
the future of ai in healthcare